தர்மபுரி, ஜூலை 16: காங்கிரஸ் சார்பில், மாவட்டம் முழுவதும் காமராஜர் 117வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில், காமராஜர் 117வது பிறந்தநாள் விழா, மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில், மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில், முன்னாள் எம்பி தீர்த்தராமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதை தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்து, காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சித்தையன், வட்டத்தலைவர்கள் சுப்ரமணி, ஜனகராஜ், விஸ்வநாதன், சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதியமான்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வட்டத்தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவி.சிற்றரசு, முன்னாள் எம்பி தீர்த்தராமன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், பொம்மிடியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சக்திவேல், மோகன், சுப்பிரமணி, வேலன், கந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. பாப்பாரப்பட்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. பாலக்கோட்டில் நடந்த விழாவில், ஜனகராஜ், சரவணன், சித்தையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.