மின்கம்பியாள் பணிக்கு தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, ஜூலை 16: கடகத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து கடகத்தூர் அரசு தொழிற்பயிற்றி நிலைய முதல்வர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடகத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு வரும் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு பணிபுரிந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அதற்கான சான்றிதழை அவர்கள் பணிபுரிந்த, பணிபுரியும் நிறுவனத்திடமிருந்தோ, மின் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்தோ அவர்களின் அலுவலக முத்திரை பெற்று அனுப்ப வேண்டும். இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் கம்பியாளராக பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம். தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் அளிக்கும் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட அனுபவ சான்றினை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையினை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் மூலம் பரிசீலித்த பின்னரே இத்தேர்விற்கு அனுமதியளிக்கப்படும். விண்ணப்பங்களை முதல்வர் அரசு  தொழிற் பயிற்சி நிலையம் கடகத்தூர், தர்மபுரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: