7வது பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி

தர்மபுரி, ஜூன் 21: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டம் அமலாக்கத்துறை சார்பில், 7வது பொருளாதார கணக்கெடுப்பு, இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் செயல்படும் 3 லட்சம் பொது இ-சேவை மையங்கள் மூலம் நடைபெற உள்ளது.

இம்முறை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

இதையொட்டி, 7வது ெபாருளாதார கணக்கெடுப்பிற்காக, தர்மபுரி மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை, நேற்று ரோட்டரி ஹாலில் நடந்தது. பயிற்சியில் புள்ளியியல் துறையின் துணை இயக்குனர் பன்னீர்செல்வம், பொருளாதார கணக்கெடுப்பு எடுக்கும் விதம் குறித்து விளக்கினார். முதுநிலை புள்ளியியல் அலுவலர் பாபு, கள அலுவலர் நல்லையன் தொடக்க உரையாற்றினர். இதில், மாவட்டத்தில் உள்ள இ-சேவை மைய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: