பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு வாசக மாலை ஊர்வலம்

அரவக்குறிச்சி ஜூன் 21: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 259ம் ஆண்டு சந்தஷனக்கூடு 3 நாட்கள் நடைபெறும் உருஸ்விழா நேற்று துவங்கியது. முன்னதாக கொடி ஏற்றும் விழா நடை பெற்றது. அதை தொடர்ந்து வாசக மாலை என்னும் ஊர்வலம் நடைபெற்றது. பள்ளப்பட்டி மேற்கே அமைந்துள்ள மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்காவிலிருந்து வாசக மாலை ஊர்வலமாக புறப்பட்டு தெற்கு தெரு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பள்ளப்பட்டியின் முக்கிய தெருக்களுக்குள் வந்து திரும்பவும் தர்காவில் வந்து முடிவடைந்தது. பின்னர் துஆ ஓதி இனிப்பு வழங்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் சந்தனக்கூடு என்னும் தேர்த்திருவிழா நடைபெறும். இதன் காரணம் தர்ஹா வளாகம் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: