அரூர் பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள் செங்கல் சூளைக்கு வெட்டி அனுப்பும் அவலம்

அரூர், ஜூன் 19: அரூர் பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழைகள் பொய்தததால் மாநிலம் முழுவதும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில், விவசாயிகள் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3ஆண்டுகளாக பருமழை பொய்த்து ேபானதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தென்னை மரங்கள் அனைத்தும் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. சில விவசாயிகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு செங்கல் சூளைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும்

அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘3 ஆண்டுகளாக கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லாததால், தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள், பலன் தரும் தருவாயில் காய்ந்து விட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க ேவண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர் வாரி வரும் மழை காலத்தில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றனர்.

Related Stories: