கரூரில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 18: கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தார்.சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் சங்க கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க செயலாளர் ராஜா முகமது உட்பட அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். ஒரே உத்தரவில் பல்வேறு விதமாக கணக்கீடுகள் சம்பளம் வழங்கும் வளர்ச்சித்துறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பணிக்கொடை ஒய்வூதியம் வழங்க வேண்டும்.கிராம ஊராட்சி ஒஎச்டி ஆப்பரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளத்தை சரியாக கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: