வஉசி நகர் சாலையோரம் வடிகால் மீது சிலாப் அமைக்கப்படுமா?

கரூர், ஜூன் 14: கரூர் நகராட்சிக்குட்பட்ட வஉசி நகர் சாலையோரம் உள்ள வடிகால் மீது சிலாப்பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் மில்கேட் பகுதியில் இருந்து கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு செல்லும் சாலை உள்ளது. வஉசி தெருவின் வழியாக அனைத்து தரப்பு மக்களும் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் தனியார் மருத்துவமனை மற்றும் பஸ்பாடி நிறுவனங்கள் உள்ளன. ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதன் வழியாக தாந்தோணிமலையின் பிரதான சாக்கடை வடிகால் மில்கேட் வரை செல்கிறது.ஆனால், சாக்கடை வடிகாலின் குறிப்பிட்ட தூரம் மிக ஆழமான பகுதியாக உள்ளது. அவை எப்போதும் திறந்த நிலையில் உள்ளன. இதனால், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் தவறி இதில் விழுந்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் இந்த தெருவின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பீதியுடன்தான் சென்று வருகின்றனர். எனவே, திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் மீது பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நலன் கருதி சிலாப் வைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே, அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, சிலாப் பொருத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: