தண்ணீர் இல்லாததால் கத்தரிக்காய் விளைச்சல் பாதிப்பு

தர்மபுரி, ஜூன் 14:  தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 200 ஏக்கருக்குமேல் கத்திரிக்காய்  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 10டன் முதல் 20 டன்வரை மகசூல் கிடைக்கும். நேற்று தர்மபுரி உழவர் சந்தையில், ஒரு கிலோ கத்திரிக்காய் ₹28 முதல் ₹30 வரை விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி சுந்தரம் கூறுகையில், ‘பாலக்காடு, தர்மபுரி, பென்னாகரம் தாலுகாவில் கத்தரிக்காய் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால், கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து சரிந்து, விலை உயர்ந்து ஒரு கிலோ ₹30 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: