நல்லம்பள்ளி அருகே திமுக தெருமுனை பிரசார கூட்டம்

தர்மபுரி, ஜூன் 13: நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழாவையொட்டி, தெருமுனை பிரசாரக்கூட்டம் எர்ரபையனஅள்ளி, எச்சனஅள்ளி, கோணங்கிஅள்ளி ஊராட்சியில் நடந்தது. நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமரன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் வைகுந்தம், சித்தன், கண்ணன், கிருஷ்ணன், இளைஞரணி ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் ஆம்பூர் தர்மன், மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், நிர்வாகிகள் வேலு, பாண்டுரங்கன், தாண்டவன், குமார், விஸ்வநாதன், செவத்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: