தொன் போஸ்கோ கல்லூரியில் குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி தொன் போஸ்கோ கல்லூரியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர், மண்டலக்கல்வி இணை இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடந்த இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் சிலுவைமுத்து உறுதிமொழி வாசித்தார். கல்லூரி துணை முதல்வர் ராபர்ட் ரமேஷ் பாபு, பொருளாளர் சாம்சன் சண்முகம் மற்றும் பேராசிரிகள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் இந்நிகச்சியில் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டோம், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories: