கடத்தூர் பகுதியில் சோளத்தட்டையில் படைப்புழு தாக்கம் அதிகரிப்பு

கடத்தூர், ஜூன் 12: கடத்தூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளத்தட்டையில் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர். கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி, புது ரெட்டியூர், அய்யம்பட்டி, ராமியனஅள்ளி,  சில்லாரஅள்ளி, சுங்கரஅள்ளி, தாளநத்தம், வே.புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500ஏக்கர் நிலப்பரப்பில், சோளம் சாகுபடி செய்துள்ளனர். கால்நடைகளுக்கு தீவனமாகவும், உணவு தேவைக்காகவும் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட சோழ தட்டில், படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவனமாக கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், ேவளாண் துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான ஆய்வு செய்து, சோளத்தட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: