முறைகேடாக கந்து வட்டி தொழிலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை கரூர் எஸ்பி எச்சரிக்கை

கரூர், ஜூன் 12: கரூர் மாவட்டத்தில் முறைகேடாக கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கூறினார். கரூர் மாவட்ட நிதி நிறுவனங்கள் நடத்துவோருக்கான கருத்தரங்கம் நேற்று கரூரில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட எஸ்பி விக்ரமன் பின்னர் நிருபர்களிடம் கூறியது: கரூரில் கந்துவட்டி புகார்கள் அதிக அளவில் வருகிறது. கந்துவட்டி, மீட்டர்வட்டி, ராக்கெட் வட்டி என சட்டதிடடங்களை மீறி வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பதிவுபெறாத நிதி நிறுவனங்கள் கரூரில் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பதிவு பெறாத பைனான்ஸ் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்படும்போது பதிவுபெற்ற பைனான்ஸ் நிறுவனங்களுக்குத்தான் காவல்துறையால் உதவி செய்ய முடியும். கடன் பெற்று தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் பணம் வாங்கி மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: