கங்கைகொண்டான் சித்தார்சத்திரம் பருத்திகுளம் தலைக்கா உடையார் சாஸ்தா கோயிலில் மே31ல் வைகாசி கொடை விழா

நெல்லை, மே 28:  கங்கைகொண்டான் சித்தார்சத்திரம் என்ற பருத்திகுளம் தலைக்கா உடையார் சாஸ்தா  கோயில் வைகாசி கொடை விழா வரும் 31ம் தேதி நடக்கிறது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்கின்றனர். கங்கைகொண்டான் சித்தார்சத்திரம் என்ற பருத்திகுளத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தலைக்கா உடையார் சாஸ்தா கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொடை விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா வரும் 31ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசாணைக் கால்நாட்டுதல் வைபவம் கடந்த 17ம் தேதி நடந்தது. நாளை மறுதினம் (30ம் தேதி) குடியழைப்பு, கும்பம் ஏற்றுதல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி கொடை விழா கோலாகாலமாக நடக்கிறது. மறுநாள் (ஜூன் 1ம் ேததி) நேர்த்திக்கடன் செலுத்துதலும், மகா அன்னதானமும் நடக்கிறது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்கின்றனர். ஜூன் 7ம் ேததி 8ம் திருவிழா பொங்கலிடும் வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற உள்ளது. கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தீவிரமாக செய்துவருகின்றனர்.

Related Stories: