பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் 18,305 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கோவிந்தசாமி வெற்றி

பாப்பிரெட்டிப்பட்டி, மே 25: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் 18,305 வாக்கு வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி வெற்றி பெற்றார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மணி(திமுக), கோவிந்தசாமி(அதிமுக), டி.கே.ராஜேந்திரன்(அமமுக), நல்லதம்பி(மநீம), சதீஷ்(நாம் தமிழர் கட்சி) மற்றும் 6 சுயேட்சைகள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம், வாக்கு எண்ணிக்கை நடந்தது. 23 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் மணி 82208 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 100513 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் 18,305 ஆகும். இதையடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, கோவிந்தசாமியிடம் பாப்பிரெட்டிப்பட்டி உதவித் தேர்தல் அலுவலர் கீதாராணி வழங்கினார். இதை தொடர்ந்து, அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பாராட்டு தெரிவித்தனர்.

9,394 வாக்கு வித்தியாசத்தில் அரூரில் அதிமுக வெற்றி

அரூர்: அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கிருஷ்ணகுமார்(திமுக), சம்பத்குமார்(அதிமுக), முருகன்(அமமுக), திலீப்(நாம் தமிழர் கட்சி) மற்றும் 5 சுயேட்சைகள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், கிருஷ்ணகுமார் 79238, சம்பத்குமார் 88632, முருகன் 20282, தீலிப் 3902 வாக்குகள் பெற்றிருந்தனர். அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் 9,394 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை, தேர்தல் அலுவலர் புண்ணியக்கோடி, சம்பத்குமாரிடம் வழங்கினார்.

Related Stories: