சிறுமுகையில் குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அவதி

மேட்டுப்பாளையம், மே 19:   மேட்டுப்பாளையத்தில் தற்போது காடுகளில் இருந்து வெளியேறிய குரங்குகள், பாலபட்டி, ஒடந்துறை, ராமசாமி நகர், மகாதேவபுரம், என பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து அங்கேயே நிறந்தரமாக தங்கிவிட்டது. இவ்வாறு வரும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதும் அதை தடுத்தால் மனிதர்களை தாக்குவதும் குறிப்பாக குழந்தைகளை கடித்து விடுவதும் போன்ற சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், குரங்குகள்காடுகளில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மா, பலா, உள்ளிட்டவற்றை மனிதர்கள் எடுத்து செல்கின்றனர் இந்த பழங்களை எடுக்கும் போது குரங்குகளுக்கு தேவையான உணவு கிடைப்பது இல்லை. காடுகளில் குரங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்காததால் அவை குடியிருப்புகளுக்கு புகுந்துவிடுகிறது. இதனால் சில சமயங்களில் குரங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவமும் நடக்கிறது. இதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: