தர்மபுரி நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்க அழைப்பு

தர்மபுரி, மே 17: தர்மபுரி நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்குமாறு, ேசலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பிஆர்எம் காம்ளக்சில் ஐஸ்வர்யலட்சுமி பைனான்சியர்ஸ் என்ற நிதி நிறுவனத்தை மாதையன், அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோர் நடத்தி வந்தனர். இதில் தஞ்சாவூர் நாஞ்சிக்ேகாட்டைரோடு பழனியப்பா நகர் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜாசுரேஷ்(50) என்பவர், ₹32 லட்சம் ெடபாசிட் செய்திருந்ததாகவும், இதனை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில், இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்து ஏமாந்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.  இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதால், இதில் ஏமாற்றப்பட்டோர் அசல் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன்,  சேலம் வெண்ணங்ெகாடி முனியப்பன் கோயில் பின்பகுதியில் உள்ள  ேசலம் ெபாருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்குமாறு ேபாலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Stories: