பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

பாப்பிரெட்டிப்பட்டி, மே 8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றுக்கு 5ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் ேநற்று முன்தினம் மாலை பாப்பிரெட்டிப்பட்டி பலத்த சூறைக்காற்று வீசியது, இதில் பில்பருத்தி பகுதியை சேர்ந்த விவசாயி அரசு என்பவரது தோட்டத்தில் சாகுபடி ெசய்திருந்த, 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதே போல், வாழை சாகுபடி செய்யப்பட்ட பல தோட்டங்களிலும் சேதமடைந்தள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: