அரூரில் பழுதடைந்த அரசு குடியிருப்பு

அரூர், மே 8: அரூரில், பழுதடைந்த பொதுப்பணித்துறை குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டுமமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பேரூராட்சியில் 11வது வார்டில் பொதுப்பணித்துறை சார்பில், 100 ஆண்டுக்கு முன்பு அரசு குடியிருப்பு கட்டப்பட்டது. அங்கு, 24 வீடுகள் கட்டப்பட்டது. வெளியூரிலிருந்து பணிக்கு வரும் அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்கென ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பில் 10 வீடுகள் மட்டுமே குடியிருப்பதற்கு ஏற்றதாக உள்ளது. மீதமுள்ள குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களும், வீடுகளும் உள்ளது. பொதுப்பணித்துறை வீடுகள் பாழடைந்து கிடப்பதால், அங்கு விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, பாழடைந்த வீடுகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்ைக எடுக்க ேவண்டும் என்றனர்.

Related Stories: