கரூர் அரசு கலைக்கல்லூரி அருகே நிழற்குடை அமைக்கப்படுமா? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு

கரூர், மே 8: கரூர் அரசு கலைக் கல்லூரி அருகே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  மாணவ,மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முடிந்து கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுககு செல்வதற்கு கல்லூரி நுழைவு வாயில் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். கல்லூரிக்கு எதிரே உள்ள மற்றொரு நிழற்குடையில், வெள்ளியணை, தரகம்பட்டி, உப்பிடமங்கலம், சேங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேரூந்து ஏறிச் செல்கின்றனர்.

ஆனால், கல்லூரி நுழைவு வாயில் அருகே நிழற்குடை வசதி இல்லாத காரணத்தினால், வெயில் மற்றும் மழை போன்ற சீதோஷ்ணநிலைகளுக்கு மத்தியில் பேரூந்துகள் ஏறிச் செல்கின்றனர்.எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி குறிப்பிட்ட பகுதியில் நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: