அரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

அரூர், ஏப்.26:  அரூர் ஆர்டிஓ அலுவலகத்தில், விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரூர் பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முகாமில், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், தங்களது வாகன உரிமம் மற்றும் பதிவை புதுப்பிக்க வந்திருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் பேசுகையில், ‘இருசக்கர வாகனங்களில் கண்டிப்பாக பக்கவாட்டு கண்ணாடி வைக்கவேண்டும். வளைவுகளில் திரும்பும் போது, உரிய எச்சரிக்ைக செய்யவேண்டும், ஹெல்மெட் அணிந்து வாகனங்களில் செல்லவேண்டும், சாலைகளில் செல்லும் போது செல்போனில் பேசியபடி செல்வதை தவிர்க்க வேண்டும். விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்,’ என்றார். இந்த விழிப்புணர்வு முகாமில் ஏரளாமான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: