தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தர்மபுரி, ஏப்.25: தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்து 140 கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கல்லூரி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இலவசக் கல்விக்கான அனுமதி கடிதம் வழங்கி, கல்லூரியின் தலைவர் வருவான் வடிவேலன் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு, கல்லூரியின் தலைவர் வருவான் வடிவேலன் கேட்டுக்கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மற்றவர்களும் கல்வி அலுவலரை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் மாதவன், துணைத்தலைவர் டாக்டர் வினோத் வெற்றிவேல், துணை முதல்வர் சிவக்குமார், நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: