மாவட்டம் முழுவதும் 106 மிமீ மழை

தர்மபுரி : தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவது வழக்கம். வெயிலுக்கு பயந்து பகலில் வீட்டிற்குள்ளேயே மக்கள் முடங்கி இருப்பார்கள். அதே போல் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படும். வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் குளர்பானங்களை பருகி மக்கள் வெயிலில் இருந்து வெப்பத்தை காத்து கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. காலையில் வாட்டி வதைக்கும் வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்கள், தற்போது கோடை மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  மேலும் மழையால் வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளில் தற்போது ஓரளவிற்கு நீர் வரத்து வந்து கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் வருமாறு (மிமீ) தர்மபுரி -17 மிமீ, பாலக்கோடு- 10 மிமீ, மாரண்டஅள்ளி -0, பென்னாகரம்-20 மிமீ, ஒகேனக்கல்- 55 மிமீ, அரூர்-0, பாப்பிரெட்டிபட்டி- 4.2 மிமீ.

மொத்தம் மாவட்டம் முழுவதும் 106.2 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என  விவசாயிகள் கருதுகின்றனர்.

Related Stories: