உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி, ஏப். 24: பொள்ளாச்சி தேர்நிலை கிளை நூலகம் சார்பில், உலக புத்தக தினத்தையொட்டி நேற்று, காந்திசிலையருகே புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதற்கு, வாசகர் வட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தர்கினார். ஞானசேகர் வரவேற்று பேசினார். முன்னாள் நூலகர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகித்து துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, நகரில் மத்திய பஸ் நிலையம், தேர்நிலை, திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பொதுமக்களுக்கு புத்தக வாசிப்பு  குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: