ஒகேனக்கல்லில் ஆபத்ைத உணராமல் காவிரியில் மது குடித்தபடி குளிக்கும் சுற்றுலா பயணிகள்

பென்னாகரம், ஏப்.23: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துகொண்டே சுற்றுலா பயணிகள் மது அருந்துவதால் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, கர்நாடகா. ஆந்திரா, மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஆலாம்பாடி, ஊட்டமலை பரிசல்துறை, முதலைப்பண்னை, நாகர்கோவில், கோத்திக்கல் ஆகிய ஆபத்தான பகுதிகளில் ஆற்றில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதையில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதை போலீசார் பல முறை எச்சரித்தும், சுற்றுலா பயணிகள் கேட்பதாக இல்லை. ஆலாம்பாடி, ஊட்டமலை பரிசல்துறை, முதலைப்பண்னை, நாகர்கோவில், கோத்திக்கல் ஆகிய ஆபத்தான பகுதிகளில், கடந்த 4 மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதை தொடர்ந்து, ஆபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே ேபால், ஆலாம்பாடி, ஊட்டமலை பரிசல்துறை, முதலைப்பண்னை, கோத்திக்கல் ஆகிய பகுதிகளில் இனி யாரும் மது அருந்தியபடி குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மீறுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி, உயிரிழப்பை தடுக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க ஒகேனக்கல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: