பென்னாகரத்தில் திடீர் மழை

பென்னாகரம், ஏப்.23: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாசம்பட்டி, ஏரியூர், ஒகேனக்கல் மற்றும் சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அருவியில் தண்ணீர் அதிகரித்தது. நேற்று மாலை பெய்த திடீர் மழையால் பென்னாகரம் பகுதியில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையில் சிறுவர், சிறுமிகள் விளையாடினர். தொடர்ந்து கனமழை பெய்து வருதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: