ஜெம் மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி மாநாடு

கோவை, ஏப்.21:  கோவை ஜெம் மருத்துவமனையில் தேசிய அளவிலான லேப்ராஸ்கோபி மயக்கவியல் மருத்துவ மாநாடு நேற்று நடந்தது. இதில் கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, சுதர்சன் உட்பட பலர் கலந்து ெகாண்டனர். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கு உரிய முறையில் மயக்கம் அளிப்பது குறித்து டாக்டர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. கருத்தரங்கின் போது ஜெம் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கத்தில் இருந்து  கருத்தரங்க அறைக்கு ஆபரேஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மயக்கவியல் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: