சூலுார் தொகுதி இடைத் தேர்தல் சீட் வாங்க ஆளும்கட்சியில் கடும் போட்டி

சூலூர், ஏப்.21:  கோவை மாவட்டம் சூலுார் தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என அதிமுக மேலிடம் குழம்பி வருகிறது. இந்நிலையில் திமுகவினர் ஒற்றுமையுடன் களத்தில் இறங்கியுள்ளது ஆளும் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்த கனகராஜ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சூலூரில் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தொகுதியில் திமுக., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தற்போது பொங்கலுார் பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்.  இந்நிலையில், அதிமுக சார்பில் சூலுார் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என அதிமுக மேலிடம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்கு காரணம் சீட்டு கேட்கும் இரண்டு முக்கிய புள்ளிகள் மேலிடத்தை மிரட்டி வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து சூலுார் அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘ ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை வாய் திறக்கவே யோசிக்கும் கட்சி நிர்வாகிகள் தற்போது சீட் கொடுக்க முடியுமா, முடியாதா? என மேலிடத்தை மிரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.  சூலுார் தொகுதியில் போட்டியிட மறைந்த எம்.எல்.ஏ.,கனகராஜ் மனைவி, அவரது மருமகன், கனகராஜ் தம்பி என அவரது குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூலுார் அதிமுக நிர்வாகிகளின் முழு ஆதரவுடன் முன்னாள் அமைச்சர் செ.ம., வேலுசாமியும் சீட் கேட்டு மேலிடத்தை மிரட்டி வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அமைச்சர் மற்றும் மேயராக இருந்த தனக்கு கட்டாயம் சீட் தரவேண்டும் என வேலுசாமி மேலிடத்தில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் கோவை புறநகர் பகுதி அதிமுக நிர்வாகிகளை ஒன்றிணைத்த மாதப்பூர் பாலு என்பவர் கட்சியில் நீண்ட காலமாக நான் இருக்கிறேன் எனவே எனக்குதான் சீட் தரவேண்டும் என மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார். இப்படி பலரும் போட்டியிடுவதால் யாருக்கு சீட் தருவது என மேலிடம் குழம்பி வருகிறது.

இருந்த போதிலும் உள்ளூர் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கையை காட்டும் நபருக்கே அதிகம் வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.சூலுார் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் கோவை மாவட்ட அரசியலில் கோஷ்டி மோதல் வெடிக்கும் என்றும், பலரும் கட்சி மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் திமுகவை பொறுத்தவரை ஆங்காங்கே பிரிந்து இருந்த கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு பொங்கலுார் பழனிசாமி வெற்றிக்காக களத்தில் இறங்கியுள்ளனர். இது ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால்

Related Stories: