பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து அமைச்சர், அன்புமணி பிரசாரம்

தர்மபுரி, ஏப்.14: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, அமைச்சர் கேபி அன்பழகன், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தசாமிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவிந்தசாமியை ஆதரித்து, நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, கோடுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பமரத்தூர் பகுதியிலும், முத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மங்களக்கொட்டாய் பகுதியிலும், கொண்டகரஅள்ளி ஊராட்சியில் மணலூர் பகுதியிலும், திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சியிலும் பிரசாரம் செய்தார். அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனும் பிரசாரம் மேற்கொண்டார். அன்புமணி பேசுகையில், அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும், நதிகளையும் இணைக்க தனி அமைச்சகம் அமையவும் மோடி மத்தியில் மீண்டும் பிரதமராக வேண்டும். எனவே, எனக்கு மாம்பழம் சின்னத்திலும், கோவிந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: