கடத்தூர், பாப்பாரப்பட்டி அருகே வாகன தணிக்கையில் ₹7.22 லட்சம் பறிமுதல்

கடத்தூர், ஏப்.4:  பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் செயற்பொறியாளர் வெங்கடராமன் தலைமையிலான குழு நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடத்தூர் கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்த சீனிவாசன், பெட்ரோல் பாங்க் உரிமையாளர். இவர், தனது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ₹5.36 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.   இதேபோல், நேற்றுமாலை 4 மணியளவில் கடத்தூர் பகுதியில், வட்டாட்சியர் கருப்புசாமி  தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வெள்ளோலை கிராமத்தைச் சேர்ந்த அழகேசன், வியாபாரி. தொழில் நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் ₹86,250 ரூபாய் கொண்டு சென்றுள்ளார். உரிய ஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்த பணத்தை  தேர்தல் அலுவலர்  கீதாராணியிடம்  ஒப்படைக்கப்பட்டது.

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி பகுதியில், அதிகாரி மனோகரன் தலைமையிலான பறக்கும்படையினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில் உரிய ஆவணமின்றி ₹1 லட்சத்து 200 இருப்பது தெரியவந்தது. இது குறித்து, ஆட்டோவில் வந்தவரிடம் விசாரித்த போது, அவர் நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி அருகே, ெஜயந்தி காலனி பகுதியை சேர்ந்த ராஜூ மகன் பொன்முடி(30) என்பது தெரியவந்தது. முட்டை வியாபாரியான அவர், நாமக்கல்லில் இருந்து பாலக்கோட்டிற்கு முட்டை இறக்குமதி செய்து விட்டு, வசூலான பணத்துடன் பாப்பாரப்பட்டி வழியாக தர்மபுரி சென்று கொண்டிருப்பதாக கூறினார். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: