மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்பிகை உடன் ஆகிய மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் நேற்று மாலை 3.30 மணிக்கு சூலினி துர்கைக்கு ராகு கால சிறப்பு பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டனர். இதையடுத்து, பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு நந்திகேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு, நந்தி வாகனத்தில் மல்லிகார்ஜூன சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: