அமமுக, எஸ்டிபிஐ நிர்வாகிகள் கூட்டம்

உடன்குடி,மார்ச் 26: உடன்குடி ஒன்றிய, நகர அமமுக, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றிய அமமுக செயலர் அம்மன்நாராயணன் தலைமை வகித்தார். நகர செயலர் கோயில்மணி, எஸ்டிபிஐ நகர தலைவர் ஹாஜாமுகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் புவனேஷ்வரனை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தீவிரமாக பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் பாசறையின் மாநில துணைசெயலர் மனோகரன் கலந்து கொண்டு பேசினார். எஸ்டிபிஐ திருச்செந்தூர் தொகுதி தலைவர் குலசை தாஹிர், குலசேகரன்பட்டினம் கிளை தலைவர் சுல்தான் பாதுஷா, மற்றும் ஏராளமான கிளை நிர்வாகிள் கலந்து கொண்டனர்.

Related Stories: