காரிமங்கலம் அருகே பிரதான குடிநீர் குழாய் உடைப்பு

காரிமங்கலம், மார்ச் 22: காரிமங்கலம் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, சாக்கடை நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காரிமங்கலம் அடுத்த ராமாபுரம், திண்டல், மொட்டலூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆரதஅள்ளியில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் காரிமங்கலம் பேரூராட்சி வழியாக செல்கிறது. இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டில், தனியார் மண்டபம் அருகே கூட்டு குடிநீர் செல்லும் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சாக்கடை கழிவு நீர் கலந்து செல்கிறது. இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் செல்லும் பிரதான குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: