வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு

தர்மபுரி, மார்ச் 22: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், நாடாளுமன்ற தேர்தல் சிஸ்டமெட்டிக் ஓட்டர்ஸ் எஜூகேசன் மற்றும் எலக்ட்ரிகல் பார்ட்டிபஷன் (எஸ்விஇஇபி) மூலம் 1000 மாணவர்கள் கலந்து கொண்ட சி.விஜில் என்ற எழுத்து வடிவத்தை மாணவ, மாணவிகள் வடிவமைத்து நின்றிருந்தனர். சி.விஜில் ஆப்ன் தேர்தல் விதிமீறல்களை நேரடியாக தெரிவிக்க பயன்படுத்துதலின் முக்கியத்துவத்தை விளக்கினர். மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், கல்லூரி மேலாண் துறை வரலாறு பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

 இதுபோல் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முதல் பாலக்கோடு - ஓசூர் பை பாஸ் சாலை வரை சுமார் 100 ஆட்டோக்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தர்மபுரி தனிதுணை ஆட்சியர் அஜய் சீனிவாசன், பாலக்கோடு டிஎஸ்பி கார்த்திகேயன், தாசில்தார்கள் கேசவமூர்த்தி, ராஜா மற்றும் அதிகாரிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்வதை வலியுறுத்தியும், நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: