கோவையில் 1248 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

கோவை, மார்ச் 21: கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கும் படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி நேற்று வரை 1248 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோவை புறநகர் பகுதிகளில் 721 பேருக்கும், மாநகர் பகுதியில் 790 பேர் என 1511 பேருக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்த துப்பாக்கிகளை உரியவர்கள் அவர்கள் எல்லைக்குட்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  இதனையடுத்து கோவை மாவட்டத்தில் இதுவரை 1248 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களும் விரைவில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைப்பார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

Related Stories: