மாவட்டத்தில் கடும் வெயில் பார்ம் ரோஸ் விளைச்சல் பாதிப்பு

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக பார்ம்ரோஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்து வருகிறது.

இந்த நிலையில் வாசனை திரவியம், குளியல் சோப், பத்தி, ரூம் பிரஸ்னெர் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பார்ம்ரோஸ் புல் உற்பத்தி சரிந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் உள்பட மாவட்டம் முழுவதும் 1500 ஏக்கருக்கு மேல், பார்ம்ரோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் பருவமழை 60 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது. இதனால், விவசாயிகள், நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்வது குறைந்தது. நடப்பாண்டில் கடும் வறட்சி காரணமாக பார்ம்ரோஸ் புல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயில் தயாரிக்கும் பார்ம்ரோஸ் கிரசர்கள் அனைத்தும் மூடிக்கிடக்கிறது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories: