பேரூரா, பட்டீசா கோஷத்துடன் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

தொண்டாமுத்தூர், மார்ச் 19: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேத்திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வேள்வி பூஜைகள், சுவாமிதிருவீதி உலா நேற்று முன் தினம் இரவு பச்சைநாயகி உடனமர் பட்டீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைப்பெற்றது. சிவப்பு நிறப்பட்டு உடுத்திய பச்சைநாயகியும் , வெண் பட்டு உடுத்திய பட்டீஸ்வரர்  மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதைத் தொடர்த்து திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது. பக்தர்கள் போட்டிபோட்டு மொய் எழுதினர். விழாவின் ஏழாம் நாளான நேற்று பட்டீஸ்வரர் பெரிய தேரிலும், பச்சைநாயகி சிறிய தேரிலும் எழுந்து அருளினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மாலை 4.30 மணியளவில் பேரூராதீனம் மருதாசல அடிகளார்,  பிள்ளையார் பீடம் பொன் மணிவாசக அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், கோயில் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். அப்ேபாது பேரூரா, பட்டீசா, என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். முக்கிய வீதிகள் வழியாக இரண்டு பெரிய தேர்களும், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வர் ஆகிய தேர்களும் வந்து நிலை சேர்ந்தன. வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் ெசய்தனர். அன்னதானம் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பேரூர் அண்ணாதுரை, தாமரைசெல்வன் மற்றும் குழுவினர் வழங்கினர். தேர் செல்லும் வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: