கொமதேக கண்டனம்

கோவை, மார்ச்.14: கொமதேக இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி கூறியதாவது:தமிழகத்தில்  கடந்த சில ஆண்டுகளாகவே அமைதி சீர்குலைந்து ஆங்காங்கே வன்முறை, பெண்களுக்கு  எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச  படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கண்டிக்கத்தக்கது.  தூத்துக்குடியில் தனது உரிமைக்கு போராடிய அப்பாவி மக்களை சுட்டு தள்ளிய  போலீசார், பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது ஏன்  இன்னும் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.  பெண்களின் வாழ்க்கையை சீரழித்த  குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் அவர்களை  தண்டிப்போம். பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சூரியமூர்த்தி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: