மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

தர்மபுரி, மார்ச் 12: தேர்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மனுக்களுக்காக தனியாக பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி, 39 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானதை தொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, வாரந்தோறும் திங்கள்கிழமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பொதுமக்கள் வழக்கம் போல் மனுக்களுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பொதுமக்கள் நேரடியாக கலெக்டரிடம் வழங்காமல், அலுவலக வளாத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் மனுக்களை போட்டனர்.  இந்த நடைமுறை, தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: