தர்மபுரி, பிப்.28: அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தின் சார்பில், ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோர், அமமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.