தேசிய தேக்வோண்டா போட்டியில் மாணவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி, பிப்.27: 64வது தேசிய அளவலான தேக்வோண்டா விளையாட்டுப் போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தில், கடந்த மாதம் 64வது தேசிய அளவிலான தேக்வோண்டா விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 32 மாநிலங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில், 17 வயதிற்குட்பட்டோருக்கான 59 கிலோ எடைப்பிரிவில் ஹன்ஸ்ராஜ் வர்மா தங்கப் பதக்கம் வென்றார்.

மேலும் முதலாவது மாநில அளவிலான தேக்வோண்டோ போட்டிகள், சேலம் மகாத்மா காந்தி உள் விளையாட்டு அரங்கில் கடந்த 9 மற்றும் 10ம் தேதி என இரு நாட்கள் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் ரஞ்சித்குமார், மனோஜ் ஆகியோர் தங்க பதக்கமும், அஸ்வின் உதயகுமார் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவில் மற்றும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ராஜகோபால் ஆகியோரை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் பாராட்டினார்.

Related Stories: