பஸ் மோதி காவலாளி பலி

கோவை, பிப்.20: கோவை வடவள்ளியை அடுத்த பாலகணேசபுரம் பொங்காளியூரை சேர்ந்தவர் முத்துசாமி ( 76). இவர் இடையர்பாளையம் செல்லும் வழியில் இ.பி.காலனியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இடையர்பாளையம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி இறந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

கூலித்தொழிலாளி தற்கொலை
Advertising
Advertising

கோவை, பிப்.20: கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் காசிநாதன்(50). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் கோவை செட்டி தெரு சாலையில் உள்ள ஒரு சாக்கடை கால்வாய் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காசிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்தது.

Related Stories: