தீ விபத்து தடுக்க உஷார் உத்தரவு

கோவை, பிப்.20: கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது. வெப்ப நிலை உயர்வால் மில், ஆயில் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் தீ விபத்து அபாயம் உள்ளது. கோடையை முன்னிட்டு தீ விபத்தை தவிர்க்க கோவை தெற்கு, வடக்கு, கணபதி, பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் தீ தடுப்பு சாதனங்கள், தீ அணைக்கும் வேதிப்பொருட்கள், வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களில் தீ தடுப்பு சாதனங்கள் முறையாக இயங்குகிறதா, போதுமான அளவு தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertising
Advertising

அரசு அலுவலகங்களில் தீ தடுப்பு சாதனங்களின் இயக்கத்தை சரி பார்த்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  தொழில் நிறுவனங்கள் மூடப்படும் போது மின் ஒயர் பழுது ஏற்பட்டுள்ளதா, காற்றோட்ட வசதியுள்ளதா, தீ பிடிக்கும் பொருட்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதா என கண்காணிக்கவேண்டும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: