203 துவக்க, நடுநிலை பள்ளிகளில் ‘கல்வி சீர்’ விழா நடக்கிறது

கோவை, பிப்.20: கோவை மாவட்டத்திலுள்ள 203 துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ‘கல்வி சீர்’ விழா நடக்கிறது. இதில் பள்ளிக்கு உதவி புரிந்த தன்னார்வலர்கள் பாராட்டப்படுகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா) கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள 1,130 அரசு பள்ளிகளில் 203 துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து ‘கல்வி சீர்’ விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு பள்ளிக்கு ரூ.1,500 ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி முதல் வரும் 22ம் தேதிக்குள் 203 பள்ளிகளிலும் ‘கல்வி சீர்’ கூட்டம் நடக்கிறது. அதன்படி, கடந்த 18ம் தேதி கோவை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால் மண்டபம், மலுமிச்சம்பட்டி, குரும்பபாளையம் ஆகிய பள்ளிகளிலும், நேற்று கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியிலும் ‘கல்வி சீர்’ விழா நடந்தது.

‘கல்வி சீர்’ விழாவில், பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டில் தேவையான உதவி செய்தவர்கள், சேர்க்கை அதிகரிப்பு, வருகை பதிவு அதிகரிப்பு, தூய்மை திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு காரணமான தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். வரும் ஆண்டில் இது போல் தொடர்ந்து சமுதாய பங்களிப்பு செய்யவும் ேவண்டுகோள் விடுக்கப்பட்டது. குரும்பபாளையம் பள்ளியில் நடந்த பள்ளி சீர் விழாவில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளிக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கினர்.

Related Stories: