காதலர் தினத்தையொட்டி ஆழியார்அணைப்பகுதியில் இந்துமுன்னணினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, பிப்.15: காதலர் தினத்தையொட்டி, பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு நேற்று, காதலர்கள் வந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா தளங்களில் ஒன்றான ஆழியார் அணைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். நேற்று காதலர் தினம் என்பதால், ஆழியாருக்கு காதலர்கள் அதிகம் வருவார்கள் என்பதை அறிந்த போலீசார், ஆங்காங்கே கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டனர். ஆழியார் டேம் நுழைவு வாயில், பூங்கா வழித்தடம் மற்றும் அணை பகுதியில் போலீசார் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆழியார் ஸ்டேஷன் சோதனை சாவடியில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
Advertising
Advertising

 இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பலர், பூங்கா அருகே கூடி, அங்கு வரும் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காதலர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அங்கு வந்த போலீசார், அவர்களை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆழியார் பூங்கா முன்பு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், ஒரு சில காதல் ஜோடிகள் போலீசாரின் கெடுபிடி மற்றும் இந்து அமைப்பினர் எதிர்பையும் தாண்டி, மாற்று பாதை வழியாக ஆழியார் அணைக்கு

சென்றனர்.

Related Stories: