பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற ேகாரிக்கை

பொள்ளாச்சி, பிப். 15:  பொள்ளாச்சி மற்றும் கிராம பகுதிகளில், குறிப்பிட்ட மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. அவ்வப்போது சுகாதார பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு உள்ளதா என்று கடைகளில் ஆய்வு மேற்கொண்டாலும், தற்போது இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் சுற்று வட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையாமல் அதிகரித்து வருகிறது.  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் திறந்தவெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

 இருப்பினும் வீடு மற்றும் வணிக வளாகம், கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே போட்டு செல்வதால் சாலையோரம் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. குறிப்பாக வடக்கிபாளையம் பிரிவு, வால்பாறை ரோடு, பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு  உள்ளிட்ட பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறி கிடப்பதை காணமுடிகிறது. சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார கேடு விளைவிப்பதுடன்,  

 எனவே, கிராமப்புற சாலையோரம் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: