அரசு மருத்துவமனையில் திருட முயன்றவர் சிக்கினார்

கோவை, பிப்.14: கோவை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்க்க வரும் உறவினர்களின் உடமைகள் அவ்வப்போது காணாமல் போனது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அனைத்து வார்டுகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

 இந்நிலையில் நேற்று காலையில், முழு உடல் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கும் வார்டில் இருந்த ஒரு பெண்ணிடம் ஒருவர் பையை திருடி கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சல் போட்டார்.
Advertising
Advertising

அங்கிருந்த காவலாளிகள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: