மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்தை நாசம் செய்த யானைகள்

பாலக்கோடு, பிப்.12: பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பகுதியில் விவசாயத்தோட்டத்தை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தில் பெட்ட முகிலாலம் மலை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சமமான நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் யானைகள் இரவு ேநரங்களில் விவசாய ேதாட்டங்களில் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெட்டமுகிலாத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ்(45) என்பவர் அவரது ேதாட்டத்தில் அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைத்திருந்த கேழ்வரகை, தடுப்புச்சுவரை உடைத்து சென்ற யானைகள் நாசம் செய்துள்ளது. பின்னர் அருகில் இருந்த தக்காளி தோட்டத்தை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயி முனிராஜிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, யானையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, சேத மதிப்பு குறித்து கணக்கெடுத்து சென்றனர். யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: