வடிகால்கள் அடைப்பால் கரூர் நகரில் பெருகி வரும் கொசு தொல்லை

கரூர், பிப். 8: கரூர் நகரில் வடிகால்கள் அடைப்பால் பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்கரூர் நகர பகுதியில் ஆங்காங்கே வடிகால்கள் அடைபட்டு கிடக்கிறது. வடிகால் அடைப்பு காரணமாக கொசுக்கள் பெருகி வருகின்றன. இரவு நேரத்தில் அரசு மருத்துவமனை, பசுபதீசுவரர் கோயில், பிரம்மதீர்த்தம் சாலை, பஸ் நிலையம் கோவை சாலை, லைட் ஹவுஸ், திண்டுக்கல் சாலை மற்றும் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுவிரட்டி புகை மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: