காரிமங்கலத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

காரிமங்கலம், ஜன.18:காரிமங்கலத்தில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரிமங்கலம் நகரத்தில் பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி சாலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து தங்கள் கடையின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டனர். ஒரு சில நிறுவனங்கள், சாலையோரம் கழிவு நீர் செல்லும் கால்வாய்களையும் அடைத்து, அதன்மேல் கிரானைட் கற்கள் பதித்து வாடிக்கையாளர் அமரும் மேடையாக மாற்றி விட்டனர். இதனால் கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், ராமசாமி கோயில் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட நேரம் அணி வகுத்து நிற்பது வாடிக்கையாகி விட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காரிமங்கலத்தில், குறிப்பாக தர்மபுரி சாலையில் உள்ள நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து கிரானைட் மற்றும் டைல்ஸ் கற்களை பொருத்தியுள்ளன. சாலை ஆக்கிரமிப்பால், கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால், நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் கொடுக்கும்படியும், நெடுஞ்சாலை துறையினரிடம் கூறினால் பேரூராட்சி நிர்வாகத்திடம் செல்லும்படியும் அலைகழிக்கின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரான போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: