வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு

தர்மபுரி, ஜன.18:  தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த வழுக்குமரம் ஏறும் போட்டியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே ராமன் நகரில், இளைஞர்கள் நல சங்கம், ஊர்பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள், இளைஞர்களுக்கு இசை நாற்காலி, பலூன் உடைத்தல், தண்ணீர் குடித்தல், லெமன் ஸ்பூன், பானை உடைத்தல், வளையத்திற்குள் பந்து போடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று மாலை, வழுக்குமரம் ஏறும் போட்டி நடந்தது. இதில் இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிறுவர்களுக்கான நடன போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் பழனிசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ராமச்சந்திரன் மற்றும் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல், இலக்கியம்பட்டி, வெண்ணாம்பட்டி, செந்தில்நகர், பாரதிபுரம், ஏரங்காட்டுக்கொட்டாய், முக்கல்நாயக்கன்பட்டி, தம்மம்பட்டி, நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை தொப்பூர், சாமிசெட்டிப்பட்டி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மொரப்பூர், கத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கம்பைநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: